சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கடத்த முற்பட்ட இருவர் கைது

07 Oct, 2025 | 12:06 PM
image

உணவு பொதியில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் கடத்த முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்  

கிளிநொச்சி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் போதைப்பொருள் தொடர்பிலான குற்றச்சாட்டில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

அவரை பார்வையிட வந்த அவரின் மனைவி , உணவு பொதிக்குள் 05 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்து சிறைச்சாலைக்குள் கடத்த முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

அதேவேளை யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் , அவரை பார்வையிட வந்த நண்பன் ஒருவர் , 5 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் சிறு தொகை கஞ்சா ஆகியவற்றை உணவு பொதிக்குள் மறைத்து கடத்த முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாண பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து...

2026-07-11 18:53:09
news-image

ஜூனில் வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் வருவாய்...

2026-07-11 18:52:32
news-image

தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில்...

2026-07-11 18:44:37
news-image

அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கிறது:...

2026-07-11 18:06:59
news-image

மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய...

2026-07-11 18:06:42
news-image

காலாவதியான மின்னஞ்சல் கட்டமைப்பைப் பயன்படுத்திய திறைசேரி...

2026-07-11 18:00:43
news-image

சந்தை சக்திகளுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவின்...

2026-07-11 18:00:19
news-image

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்நாட்டுப் பொருளாதாரச்...

2026-07-11 15:38:57
news-image

டெங்கு நோயாளர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க ஐ.டி.எச்...

2026-07-11 18:34:14
news-image

நீதி அமைச்சரை பதவி நீக்காமல் நீர்கொழும்பு...

2026-07-11 15:38:21
news-image

'டிட்வா' சூறாவளிக்கு பின் முதன்முறையாக பேராதனையிலிருந்து...

2026-07-11 18:21:58
news-image

ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

2026-07-11 17:55:03