பாடசாலைகளுக்கு இடையிலான பொறியியலாளர் சந்திரபாலன் ஞாபகார்த்த விஞ்ஞான வினா விடை போட்டி 7 ஆவது முறையாக கதிரேசன் மத்திய கல்லூரியில் திங்கட்கிழமை (06) கல்லூரி அதிபர் எஸ். ரகுவின் தலைமையில் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் கதிரேசன் மத்திய கல்லூரி, கதிரேசன் இந்து மகளிர் கல்லூரி, புனித மரியாள் கல்லூரி, புனித ஆண்ட்றூஸ் பெண்கள், கம்பளை இந்துக் கல்லூரி, வெஸ்ட்ஹால் தமிழ் வித்யாலயம் மற்றும் கிரீன்வுட் தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இருந்து க.பொ.த சாதாரண தர மாணவர்களின் குழுக்கள் பங்குபற்றின.
எழுத்துப் பரீட்சை, வினா- விடை போட்டி என்பவற்றின் இறுதியாக புனித. மரியாள் கல்லூரி, கதிரேசன் மத்திய கல்லூரி, கம்பளை இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகள் முதல் மூன்று இடங்களை பெற்றன.
விஞ்ஞான எழுத்துப்பரீட்சையில் முதல் இரண்டு இடங்களையும் கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியும் மூன்றாம் இடத்தை புனித. மரியாள் கல்லூரி பெற்றதோடு, பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றி பெற்றவர்களுக்கு கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்விற்கான அனுசரணையினை ஜோ.சந்திரபாலன் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையினூடாக வழங்கியிருந்தார்.
மேலும், இந்த போட்டிகளை கதிரேசன் மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் பெ.சசிகாந்தன் வழிக்காட்டலில் பெளதிகவியல் ஆசிரியை திருமதி.பொ. பவித்ரா நெறிப்படுத்தியிருந்தார்.

























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM