ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதையடுத்து நேரடியபக வெளிநாட்டு முதலீடாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டிற்கு கிடைப்பதாகவும் அதுமட்டுமல்லாது நாட்டிற்கு மேலும் நேரடி முதலீடாக 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் எனவும் மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டின் ஐந்தாவது நிதிக் கொள்கை தொடர்பாக கோட்டை, இலங்கை மத்திய வங்கியன் ஆளுநர் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்தபோதே மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்த்தின் மூலம் 40 கோடி அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளது. நாட்டின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் இவ்வாண்டில் 670 கோடி அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும்.
வறட்சியினால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தாலும் எதிர்வரும் நவம்பர் மாதம் அளவில் பணவீக்கம் மேலும் குறைவடையும்.
ரூபாவின் பெறுமதி டொலருக்கு அமைவாக போட்டித் தன்மையுடன் அதிகரிப்பது அவசியமாகும். ஏற்றுமதியை அதிகரிப்பது பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உற்பத்தி, முதலீடுகள் என்பனவற்றை அதிகரித்து புதிய தொழில்வாய்ப்புக்களும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.
நாட்டின் பொருளாதாரம் முறையான விதத்தில் ஸ்திரத்தன்மையை அடைந்து வருகின்ற நிலையில், நாட்டின் பொருளாதாரக் கொள்கை பற்றி சர்வதேச நாணய நிதியமும் பாராட்டுத் தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் முதலாவது காலாண்டில் தேசிய பொருளாதாரம் 2.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. இயற்கை அழுத்தங்களுக்கு மத்தியிலும் நாட்டின் ஏற்றுமதி வருமானம் 6.8 சதவீத்தினால் அதிகரித்திருந்தது. பணவீக்கம் 6.1 சதவீதத்தில் இருந்து 4.8 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது.
சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுவதாகவும் இவ்வருடத்தில் இதுவரை பத்து இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளானர் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM