நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை (06) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 719 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது 28,476 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சோதனை நடவடிக்கையில் குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 409 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்தல், பொறுப்பற்ற முறையில் வாகன செலுத்துதல் போன்ற பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக 3,483 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் இந்த நடவடிக்கையானது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிவதற்காகவே நடத்தப்படுகின்றது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM