இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா காயத்திற்கு இரண்டாம் கட்ட சிகிச்சை மேற்கொள்வதற்காக இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்நிலையில் இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி காலியில் இடம்பெற்றது, இதில் இந்திய அணி 304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் போட்டி கொழும்பில் இடம்பெற்று வருகின்றது. இத்தொடருக்கான இந்திய அணியில், காயத்தில் இருந்து மீண்ட ரோகித் சர்மா இடம்பிடித்திருந்தார். இருந்தபோதிலும் அவருக்கு இலங்கைக்கு எதிராக விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இதுவரை இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ரோகித் சர்மா, காயத்தின் இரண்டாவது கட்ட சிகிச்சைக்காக இந்தியாவிற்கு செல்வதற்காக தீர்மானித்துள்ளார்.

இது சாதாரண சிகிச்சையெனவும், சிகிச்சையின் பின்னர் ரோகித் சர்மா மீண்டும் இந்திய அணியுடன் இணைவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.