இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கு எந்த அரசும் தயார் இல்லை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Published By: Vishnu

07 Oct, 2025 | 04:31 AM
image

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மே மாதம் 16ஆம் திகதி விடுதலைப்புலிகள் என்னிடம் கூறினார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

திருகோணமலையில் 2009ஆம் ஆண்டு இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கான நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரனையும் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களையும் நினைவு கூரும் "கானல் நீதி" எனும் தலைப்பிலான உரையாடல் இன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்றது.

அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

இன அழிப்பின் சர்வதேசத்திற்கு வாக்கு மூலம் அளித்தேன் ஐ.நா மனித உரிமை பேரவையில் பொறுப்பு கூற வேண்டிய நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறை அல்ல என நான் கூறினேன்.

நான் வழங்கிய சாட்சியங்களில் புலிகளின் நடேசன், புலித்தேவன் மற்றும் பத்மநாதன் ஆகியோர் என்னைத் தொடர்பு கொண்டு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உள்ளனர். போரை நிறுத்துமாறு அரசாங்கத்துடன் பேசி பொறிமுறையை உருவாக்கித் தருமாறு கூறினர்.

நான் பசில் ராஜபக்சவும் மகிந்தாவும் அருட்தந்தையர்கள் சிலரும் இணைந்து மக்களை பாதுகாக்க இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. மே 16 இது இடம்பெற்றது. வேறு தரப்பு பக்கம் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். 

ஒரு இலட்சத்திற்கும் ஒன்றரை இலட்சத்திற்கும் இடைப்பட்ட மக்களை மீட்க இந்த முயற்சி எட்டப்பட்டது. ஆனால் கடைசி கட்டத்தில் ஆட்லறிகள் மூலம் குறித்த பகுதிக்குள் தாக்குதலை மேற்கொண்டு மக்களை அழித்தனர்.

இதன்போது குறைந்தது ஒரு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். இதனை மே16 ஆம் திகதி புலிகள் நேரடியாக கூறினர்.

இந்த இன அழிப்பு தொடர்பாக சம்பந்தன் மூன்று தூதர்களுக்கு கூறுமாறு கூறினார். நான் இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய தூதரகங்களுக்கு கூறினேன்.

இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கு எந்த அரசும் தயார் இல்லை என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்ட 1500 கிலோவிற்கும்...

2025-11-15 04:10:11
news-image

இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு...

2025-11-15 03:47:28
news-image

யாழில் கஞ்சா கலந்த மாவா மற்றும்...

2025-11-15 02:35:54
news-image

மட்டக்களப்பு வைத்தியசாலையில் கைபேசிகள் திருடிய இளைஞன்...

2025-11-14 23:00:58
news-image

பாராளுமன்றத்தில் தகாத வார்த்தைகள், குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட...

2025-11-14 15:50:45
news-image

எதிரணியை பெருந்தோட்ட மக்கள் கடுமையாக எதிர்க்க...

2025-11-14 17:02:07
news-image

323 சர்ச்சைக்குரிய கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தன...

2025-11-14 15:51:14
news-image

ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டத்தக்கு ஆதரவு...

2025-11-14 17:04:27
news-image

வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த...

2025-11-14 15:52:06
news-image

பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய...

2025-11-14 16:59:24
news-image

பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பளத்தை...

2025-11-14 17:03:23
news-image

யாழில் விளையாட்டு வினையானது; குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2025-11-14 20:00:17