(எம்.மனோசித்ரா)
இலங்கையில் பிறப்புகளின் எண்ணிக்கை வியத்தகு அளவில் குறைந்து வருகிறது. புள்ளி விபரவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி 2018இல் சுமார் 3,28,400 ஆகக் காணப்பட்;ட பிறப்புகளின் எண்ணிக்கையானது, 2024இல் 2,20,761 ஆகக் குறைந்துள்ளது. இது சுமார் 33 சதவீத வீழ்ச்சியாகப் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் சுகாதார அமைச்சின் தரவுகளைக் குறிப்பிட்டு, வருடாந்தப் பிறப்புகள் கடுமையாகக் குறைந்துள்ளதாகவும், இது நாட்டின் பாடசாலைகள் மற்றும் பணியாளர்களுக்கு நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்திருந்தார்.
இந்த வீழ்ச்சிக்குப் பல காரணங்களின் கலவையே காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சிறிய குடும்ப அளவுகளுக்கான விருப்பம் மற்றும் தாமதமான குழந்தைப்பேறு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில், இலங்கையின் கருவுறுதல் வீதம் பல ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது. இந்த நீண்ட கால வீழ்ச்சியானது அண்மைய நெருக்கடிகளால் மேலும் மோசமடைந்ததாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்த 2022ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி ஆகியவை ஒரு இரட்டைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் காரணமாகப் பல தம்பதிகள் திருமணங்கள் மற்றும் கர்ப்பங்களைத் தாமதப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM