பௌர்ணமி விடுமுறை நாளில் மதுபானம் விற்பனை - சந்தேக நபர் சிக்கியது எப்படி?

06 Oct, 2025 | 04:59 PM
image

(பாறுக் ஷிஹான்)

பௌர்ணமி விடுமுறை நாளில்  வீடொன்றில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை (06) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் நேரடி வழிகாட்டலில் இயங்கும்  போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின்  பொறுப்பதிகாரியும் உப  பொலிஸ் பரிசோதகருமான கே.எல்.எம் முஸ்தபா  தலைமையிலான பொலிஸ் குழுவினருக்கு  கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  லசந்த களுவாராய்ச்சி வழிகாட்டலில்  வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பின் போதே இந்த மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கல்முனை தலைமையக  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பில் பௌர்ணமி விடுமுறை நாளான இன்று திங்கட்கிழமை குறித்த விற்பனையில் ஈடுபடுவதாக சந்தேக நபர் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றதை  அடுத்து போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் மாறுவேடத்தில் சென்று இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு கைதானவர்  சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி வீட்டில் விற்பனைக்காக  மறைத்து வைத்திருந்த 40 க்கும் பியர்கள் உட்பட 25க்கும் மேற்பட்ட  மதுபான போத்தல்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதான சந்தேக நபரை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36
news-image

தூய்மையான இலங்கைக்கான மக்கள் பணி" -...

2026-08-08 16:46:57
news-image

இலங்கைக்குக் கடத்த முயன்ற 297 கிலோ...

2026-08-08 16:52:24
news-image

பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட...

2026-08-08 16:47:17
news-image

செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட...

2026-08-08 16:46:20
news-image

அல்லைப்பிட்டிச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து...

2026-08-08 16:39:43
news-image

விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படும் இரண்டு தமிழ்...

2026-08-08 16:22:27