மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி ; இருவர் காயம்!

06 Oct, 2025 | 04:41 PM
image

வவுனியா - இராசேந்திரம்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (06) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில இருந்து நெளுக்குளம் நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர். 

குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இராசேந்திரன்குளம் பாடசாலைக்கு அருகில் உள்ள பேரூந்து தரிப்பு நிலையத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாம்பல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த  18 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51
news-image

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவது...

2026-08-08 11:24:38
news-image

பிரகீத் எக்னெலிகொட வழக்கு: விசேட மூவர்...

2026-08-08 10:56:46
news-image

பரவிபாஞ்சான் பாலத்தை புனரமைக்குமாறு கோரி மக்கள்...

2026-08-08 10:53:50
news-image

யாழில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாவிகளை இலக்காக...

2026-08-08 10:39:40
news-image

சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த...

2026-08-08 10:34:00
news-image

புளியங்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞர்...

2026-08-08 09:57:10
news-image

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை:...

2026-08-08 09:54:46
news-image

இந்தியா–இலங்கை ஆடை வர்த்தக மாநாடு!

2026-08-08 09:47:56
news-image

மெகசின் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதி...

2026-08-08 09:19:59
news-image

வத்தளை பிறந்தநாள் விழா துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிதாரி...

2026-08-08 09:17:29