தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வலிகாமம் தென்மேற்கு மானிப்பாய் பிரதேச சபையின் கீழ் இயங்கும் மானிப்பாய், ஆனைக்கோட்டை, மாதகல், பண்டத்தரிப்பு ஆகிய பொது நூலகங்களில் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய வாசிப்பு மாத போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.
மேற்படி பொது நூலகங்களில் “மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்” எனும் தொனிப்பொருளில், வாசகர் மற்றும் மாணவர்களிடையே பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்களுக்கு தரம் 1-3, தரம் 4-5, தரம் 6-8, தரம் 9-11, தரம் 12-13, வரையான பகுதிகளில் வாசிப்பு, திருக்குறள் மனனப் போட்டி, கட்டுரை, பேச்சு, கவிதை, சித்திரம் வரைதல், பொது அறிவு, துண்டுப்பிரசுர வெளியீடு, புதிய நூல்களின் கண்காட்சி மற்றும் சிறார்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்வு போன்ற போட்டிகளும், முன்பள்ளி மாணவர்களுக்கு கதைகூறல், நிறம் தீட்டுதல், எண்கள் மற்றும் எழுத்துகளை இணைத்தல் போன்ற போட்டிகளும் நடைபெறவுள்ளது.
இப்போட்டிகள் நாளை செவ்வாய்க்கிழமை (7) ஆரம்பமாகி எதிர்வரும் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவுள்ளன.
எனவே, மேற்படி போட்டிகளில் கலந்துகொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துமாறு மானிப்பாய் பிரதேச சபையின் நூலகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM