யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று (6) பொன் விழா கொண்டாட்டம் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமானது.
ஈழத் தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று பொன்னகவைப் பெருவிழா காண்கிறது.
இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகமாக 1974ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த உயர்கல்வி நிலையம் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக வியாபித்து நிற்கிறது.
ஐம்பதாவது ஆண்டைக் கடந்திருக்கும் இந்த பல்கலைக்கழகத்தின் பன்னிரண்டு பீடங்களும் இணைந்து பொன்விழா நிகழ்வை இன்று கொண்டாடுகின்றன.
காலை 9 மணிக்கு ஆரம்பமான பொன்விழா நிகழ்வில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே.எல். வசந்தகுமார ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டிருந்தனர்.
பல்கலைக்கழகத்தின் ஐம்பது வருடகால கல்விப் பணி வரலாற்றை எடுத்தியம்பும் வகையில் அமைந்த வரலாற்றுப் பொக்கிஷமான “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன்அகவை வரலாறு” எனும் நூலும் பல்கலைக்கழகத்தின் பொன்னகவையை நினைவுகூரும் வகையிலான நினைவு முத்திரை வெளியீடும இந்நிகழ்வில் நடைபெற்றன.


























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM