அண்மையில் கைது செய்யப்பட்ட புவக்தண்டாவே சானா தொடர்பில் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்கு பிறிதொரு நாளில் முன்னிலையாக சந்தர்ப்பம் அளிக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தங்காலை பொலிஸ் நிலையத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அண்மையில் கைது செய்யப்பட்ட புவக்தண்டாவே சானா என்ற நபரின் அரசியல் தொடர்புகள் குறித்து, விமல் வீரவன்ச வெளிப்படுத்திய விடயங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக தங்காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஞாயிற்றுக்கிழமை (5) இந்த அழைப்பாணையை விடுத்திருந்தார்.
தங்காலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் குவியலை நாட்டிற்குக் கொண்டுவந்தமை தொடர்பில், அண்மையில் கைது செய்யப்பட்ட புவக்தண்டாவே சானா எனப்படும் சனத் வீரசிங்கவின் அரசியல் தொடர்புகள் குறித்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடந்த 2ஆம் திகதி ஊடக சந்திப்பொன்றை நடத்தி குறிப்பிட்டிருந்தார்.
இந்த அழைப்பாணை அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை பகல் கிடைத்ததாக குறிப்பிட்ட விமல் வீரவன்ச, ஞாயிற்றுக்கிழமை தங்காலை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக முடியாது. வேறொரு திகதியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கமைய பிறிதொரு தினத்தை வழங்க தங்காலை பொலிஸ் இணக்கம் தெரிவித்துள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM