கந்தானையில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனப்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் “மெத்தம்பெட்டமைன்” சம்பந்தமான பரிசோதனை முடிவுகள் இவ்வார இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கந்தானையில் கைப்பற்றப்பட்ட மெத்தம்பெட்டமைன் என்று சந்தேகிக்கப்படும் இரசாயனப் பொருட்கள் குறித்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் முடிவுகளை இவ்வார இறுதிக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
மித்தெனிய மற்றும் நெடோல்பிட்டியவில் ஆகிய பகுதிகளில் கைப்பற்றப்பட்ட இரசாயனப்பொருளானது ஐஸ் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மெத்தம்பெட்டமைன் இரசாயனப்பொருள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், கந்தானை இரசாயனப்பொருட்கள் பற்றிய அறிக்கையும் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை வெலிகமவிலும் மெத்தம்பெட்டமைன் இரசாயன ஆய்வுகூடமொன்று அடையாளப்படுத்தப்பட்டதோடு, மொல்டோவா நாட்டவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM