ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலங்கைக்கிடையிலான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை வெற்றி கொள்ளும் வேலைத்திட்ட ஒப்பந்தத்திலேயே இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான நீண்டகால அபிவிருத்தி இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

கொழும்பு அடிப்படை கற்கை நிறுவகத்தில் குறித்த ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி ஊனா மெக்விலி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.