றக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் மரணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அவரது காரைப் பின்தொடர்ந்த ஜீப்பில், சந்தேக நபரான 'கஜ்ஜா' என்று அழைக்கப்படும் அருண விதானகமகே பயணித்திருக்கலாம் என்று குற்றப் புலனாய்வுத் பிரிவு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
தாஜுதீனின் கொலை தொடர்பாக, கடந்த 13 ஆண்டுகளாக குற்றப் புலனாய்வுத் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இக்கொலைக்கு நேரடியாகப் பொறுப்பானவர்களை இன்னும் உறுதியாக அடையாளம் காண முடியவில்லை.
இந்நிலையில் மித்தேனியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட கஜ்ஜா, தாஜுதீனின் மரணத்திற்கு முன்பு அவரது காரைப் பின்தொடர்ந்த ஜீப்பில் பயணித்ததை உறுதிப்படுத்தும் வாக்குமூலத்தை அவரது மனைவி புலனாய்வாளர்களிடம் அளித்திருந்தார்.
விசாரணையின்போது சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.டி.வி. காட்சிகள் அவருக்குக் காண்பிக்கப்பட்டபோது அவரது மனைவியால் அடையாளம் காண்பிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, காட்சிகளில் காணப்பட்ட நபர் உண்மையில் கஜ்ஜாதான் என்பதை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த தடயத்தினை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையிலும் ஏனையவர்களை அடையாளம் காண்பதற்குமான விசாரணைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை 'கஜ்ஜா' என்று அழைக்கப்படும் அருண விதானகமகேவின் மூத்த புதல்வர், அக்காணொளியில் காணப்படுவது தனது தந்தையார் அல்ல என்றும் அது சம்பந்தமாக விசாரணை மீள ஆரம்பிக்குமாறும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM