கொழும்பு மாவட்ட மாணவர்கள் மத்தியில் போதை பாவனை பழக்கம் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது என்பதை அரச தகவல் அவ்வப்போது தெரிவிக்கின்றன.
இந்தத் தகவல்களை நாம் எளிதாக கடந்து விடக்கூடாது.
இதிலிருந்து மாணவ சமூகத்தை மீட்டெடுப்பது நம் ஒவ்வொருவரதும் பிரதான கடமையாகும் இதனை கருத்தில் கொண்டு "விழித்தெழு நெஞ்சே " என்ற அமைப்பு உதயமாகியுள்ளது.
வருமுன் காப்போம் என்பதைப் பிரதான இலக்காகக் கொண்டு மாணவர்கள் இப் பழக்க வழக்கங்களின் பால் சாராமல் அதற்கான மாற்றீடாக கலை, இலக்கியம், விளையாட்டு மற்றும் ஊடகத்துறைசார் ஆர்வங்களை ஏற்படுத்தவும் அவர்களுக்கு தேவையான உளவள மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவதற்கும் இந்த அமைப்பின் மூலமாகச் செயல் திட்டங்கள் மேற் கொள்ளப்படவுள்ளன.
எனவே இவ் அமைப்பில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் இணைந்து செயலாற்ற முன் வரவேண்டும் என அமைப்பின் நிறுவனர் ராதாமேத்தா அழைப்பு விடுக்கிறார்.
இதில் இணைந்து சமூகப் பணியாற்ற விரும்புவோர் மேலதிக விபரங்க ளைப் பெற 075 4880172 என்ற வட்சப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப் படுகின்றது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM