அம்பாறை மாவட்டம் - பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு தொகை பணத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கல்முனை விசேட அதிரடிப் படையினர் குறித்த கைது நடவடிக்கையை ஞாயிற்றுக்கிழமை (05) இரவு முன்னெடுத்தனர்.
ஐஸ் 760 மில்லி கிராம் உட்பட ஒரு தொகை பணமும் குறித்த சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர் பெரிய நீலாவணை பகுதி வீ.சி. வீதியை சேர்ந்த 36 வயதுடையவராவார். இதற்கு முன்னரும் இச்சந்தேக நபர் கடந்த ஒரு தடவை போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குபட்பட்ட கல்முனைக்குடி -3 பிரிவு கடற்கரை வீதியிலுள்ள பள்ளிவாசல் அருகில் 27 வயதுடைய சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
இச் சந்தேக நபரிடமிருந்து ஐஸ் 1,800 மில்லி கிராம் கைப்பற்றப்பட்டன. குறித்த சந்தேக நபர் இனிப்பு வியாபாரி போன்ற போர்வையில் போதைப்பொருளுடன் கைதானதாக கல்முனை விசேட அதிரடிப் படையினர் குறிப்பிட்டனர்.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM