இன்றைய சூழலில் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்மணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் இருமடங்காக அதிகரித்து வருகிறது என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இதற்கான விழிப்புணர்வு மக்களிடத்தில் இருந்தாலும்... பெண்மணிகள் இது தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்பதில் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்களை குறித்தும் அவர்கள் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்றும் விவரிக்கிறார்கள்.
இந்நிலையில் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து வைத்திய நிபுணர்கள் விளக்கம் அளிக்கையில், '' சிறிய வயதிலேயே பூப்பெய்தல்- மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் சுழற்சி நிற்பது தாமதமாவது- தாமத திருமணம் - திருமணத்திற்குப் பிறகு குழந்தை பெற்றுக் கொள்வதிலும் தாமதம் - கருத்தரிப்பதிலும் தாமதம் - கருத்தரித்து பிரசவித்த பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவதில் மாற்றுக் கருத்து - நுல்லிபாரிட்டி என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் குழந்தைகளை பெற்றுக் கொள்ளாத பெண்மணிகள்- ஆகியோருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
ஹோர்மோன் சுரப்பிகளின் செயல்பாட்டில் சமச்சீரற்ற தன்மையை ஏற்பட்டாலும் இத்தக பாதிப்பு ஏற்படக்கூடும்.
ஒபிசிட்டி என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் உடற்பருமனால் பாதிக்கப்பட்டிருந்தாலும் ...மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம். இந்த தருணத்தில் உடலில் இயல்பான அளவைவிட கூடுதலாக சேகரமாகி இருக்கும் கொழுப்புச் செல்களுடன் டாக்ஸின் எனப்படும் நச்சுக்கள் இணைந்து பணியாற்றி செல்களை சேதப்படுத்தி, அதனூடாக மார்பக புற்றுநோயை அல்லது வேறு வகையினதான புற்றுநோயை உண்டாக்கக்கூடும். இதைக் கடந்து குறைந்த சதவீத அளவில் பாரம்பரிய மரபணு குறைபாடு காரணமாகவும் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடும்.
இத்தகைய காரணங்களை அனைத்து தரப்பு பெண்மணிகளும் தெரிந்து கொண்டு, நாற்பதாவது வயதிலிருந்து அவர்கள் ஆண்டுதோறும் தவறாமல் மம்மோகிராம் எனப்படும் மார்பக புற்றுநோய் குறித்த பரிசோதனையை மேற்கொண்டு... பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போது மார்பகப் புற்றுநோயின் முதல் நிலை -இரண்டாம் நிலை- மூன்றாம் நிலை- பாதிப்பு வரை நவீன சிகிச்சை மற்றும் ஒருங்கிணைந்த சிகிச்சையில் மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது. மார்பகப் புற்றுநோயின் இறுதிநிலை அல்லது நான்காம் நிலை பாதிப்பு உள்ளவர்களுக்கு நவீன மருத்துவ சிகிச்சை மூலம் வலி நிவாரண சிகிச்சை மற்றும் கட்டுப்படுத்தும் நிவாரண சிகிச்சை ஆகியவை வழங்கப்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். '' என்றனர்
வைத்தியர் ராஜ்குமார் தொகுப்பு அனுஷா.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM