உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு மன்னாரில் பயனாளிகளிடம் வீடுகள் கையளிப்பு

06 Oct, 2025 | 02:59 PM
image

மன்னார் மாவட்டத்தில் 'செமட்ட நிவஹண' மானிய வீட்டுத் திட்டத்தின் கீழ் மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட 30 வீடுகள் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டன.

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (5) குறித்த வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் இன்றைய தினம் திங்கட்கிழமை (6) ஏனைய வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக  வசதியற்ற குடும்பங்களுக்கு ரூபாய் ஒரு மில்லியன் நிதி உதவியின் மூலம் வீடுகள் கட்டி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் 6 பயனாளிகள் வீதம் 30 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

அதற்கமைவாக மன்னார் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் பயனாளிகளின் மேலதிக நிதி செல வீட்டில் குறித்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் திங்கட்கிழமை (6) காலை மன்னார் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஏ.எம்.இப்ராஹிம் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் அதிகாரி, மன்னார் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணியாளர்கள் கலந்துகொண்டு திறந்துவைத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்ட 1500 கிலோவிற்கும்...

2025-11-15 04:10:11
news-image

இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு...

2025-11-15 03:47:28
news-image

யாழில் கஞ்சா கலந்த மாவா மற்றும்...

2025-11-15 02:35:54
news-image

மட்டக்களப்பு வைத்தியசாலையில் கைபேசிகள் திருடிய இளைஞன்...

2025-11-14 23:00:58
news-image

பாராளுமன்றத்தில் தகாத வார்த்தைகள், குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட...

2025-11-14 15:50:45
news-image

எதிரணியை பெருந்தோட்ட மக்கள் கடுமையாக எதிர்க்க...

2025-11-14 17:02:07
news-image

323 சர்ச்சைக்குரிய கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தன...

2025-11-14 15:51:14
news-image

ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டத்தக்கு ஆதரவு...

2025-11-14 17:04:27
news-image

வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த...

2025-11-14 15:52:06
news-image

பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய...

2025-11-14 16:59:24
news-image

பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பளத்தை...

2025-11-14 17:03:23
news-image

யாழில் விளையாட்டு வினையானது; குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2025-11-14 20:00:17