நடிகை ராஷ்மிகா மந்தானா நடிக்கும் 'தி கேர்ள் பிரண்ட் ' படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

06 Oct, 2025 | 02:52 PM
image

'புஷ்பா 2' படத்தின் மூலம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கிலான ரசிகர்களின் கனவுகளை ஆக்கிரமித்து கனவு கன்னியாக திகழும் நடிகை ராஷ்மிகா மந்தானா கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'தி கேர்ள் பிரண்ட்' எனும் திரைப்படத்தின் வெளியிட்டு திகதி பிரத்யேக காணொளி மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நடிகரும், இயக்குநருமான ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'தி கேர்ள் பிரண்ட்' எனும் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, தீக்ஷித் ஷெட்டி, ராவ் ரமேஷ், ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார்.

இளமை ததும்பும் காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள்  தீரஜ் & வித்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்குகிறார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நிலையில்... இந்தத் திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஏழாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் காணொளி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதர்ஸ் - திரைப்பட விமர்சனம்

2025-11-07 17:43:23
news-image

புதுமுக நடிகர் மதி நடிக்கும் 'கும்கி...

2025-11-07 17:13:13
news-image

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தில் முதல்...

2025-11-07 16:59:16
news-image

சேர்.பொன்.இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின்...

2025-11-07 16:10:59
news-image

தனுஷ் நடிக்கும் 'தேரே இஷ்க் மே'...

2025-11-07 15:47:19
news-image

சாதனை படைத்து வரும் துல்கர் சல்மான்...

2025-11-07 15:31:25
news-image

இணையத்தை அதிர வைக்கும் பிரபுதேவா பட...

2025-11-07 15:23:24
news-image

டிஜிட்டல் தளங்களிலும் ஆரியன் படத்திற்கு சிறப்பான...

2025-11-07 15:09:59
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'லஷ்மி காந்தன்...

2025-11-06 16:56:38
news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'தோட்டம் -...

2025-11-06 16:56:26
news-image

செல்ல பிராணியான நாய்களுக்கு பயிற்சி அளிக்கும்...

2025-11-06 16:56:06
news-image

'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா...

2025-11-06 16:55:47