தமிழ் திரையுலகில் சிறந்த குணச்சித்திர நடிகர்களான மைம் கோபி- தீனா- ஆகியோருடன் அறிமுக நடிகர் அனீஷ் மாசிலாமணி கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'உதிரம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'உதிரம் ' எனும் திரைப்படத்தில் அனீஷ் மாசிலாமணி, மைம் கோபி, தீனா, சார்மி, கன்னட நடிகை யஷா சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜானி நாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு துமே இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டக்தம் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அனீஷ் மாசிலாமணி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஷிவானி ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து நவம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதையின் நாயகர்கள் சூழல் காரணமாக வன்முறையை கையில் எடுத்திருப்பது தெரிய வருவதால்.. ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM