'லவ் டுடே', 'டிராகன் ' என இரண்டு கொமர்ஷல் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'டூட் ' திரைப்படத்தில் இடம் பெற்ற 'சிங்காரி' எனும் பாடல்... வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'டூட் 'எனும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் , மமீதா பைஜூ , சரத்குமார், ஹிர்து ஹாரூன், ரோகிணி, ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் வை. ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு இம்மாதம் 17ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'சிங்காரி என்ன கொஞ்சம் சிக்காம சிக்கெடுத்து..' எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் சஞ்சய் செம்வி எழுத, பின்னணி பாடகர்கள் அபர்ணா ஹரிகுமார்- யாழினி -சுஷ்மிதா நரசிம்மன் -ராஜீவி கணேஷ் -ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள். துள்ளலிசை பின்னணியில் இப்பாடல் இடம் பிடித்திருப்பதாலும்... இளைய தலைமுறையினர் உற்சாகமாக நடனமாடும் வகையிலும் தாள லயம் அமைந்திருப்பதாலும்.. இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM