தமிழ் திரையுலகில் கதை தெரிவு செய்வதிலும்... சிறந்த நடிப்பை வழங்குவதிலும்... நிகரற்றவராக திகழும் நடிகர் அருள்நிதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ராம்போ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
மண் மணம் மாறாமல் படைப்பை கொடுத்து தனி கவனத்தை ஈர்த்திருக்கும் படைப்பாளி முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள 'ராம்போ' எனும் திரைப்படத்தில் அருள்நிதி, தன்யா ரவிச்சந்திரன், ஆயிஷா, வி டி வி கணேஷ், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கிக் பொக்சிங் எனப்படும் விளையாட்டை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை சன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம் நேரடியாக சன் நெக்ஸ்ட் டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் பத்தாம் திகதியன்று பிரத்யேகமாக வெளியாகிறது.
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் அருள்நிதி- முத்தையா கூட்டணி... எக்சன் என்டர்டெய்னரிலான படைப்பை உருவாக்கி... அதனை பட மாளிகையில் வெளியிடாமல் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடுவதால் திரையுலக வணிகர்கள் கவலை அடைந்திருக்கிறார்கள்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM