அண்மையில் வெளியான 'சரண்டர்' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகர் கௌஷிக் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'பூங்கா' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் பாலசேகரன்- மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்- நடிகர் ஜாவா சுந்தரேசன்- ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி, படத்தின் இசையை வெளியிட்டனர்.
இயக்குநர் கே. பி. தனசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பூங்கா' திரைப்படத்தில் கௌஷிக், சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்மூல் ராஜா, சாய் ஜே பி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். ஹெச். அசோக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அகமது விக்கி இசையமைத்திருக்கிறார்.
ஓக்சிஜன் தொழிற்சாலையாக கருதப்படும் பூங்காவின் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை அழகு மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பூங்கா ஆர். ராமு - லட்சுமி - கீதாஞ்சலி- ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கு பற்றி, இயக்குநர் படத்தைப் பற்றி பேசுகையில், '' பூங்கா என்பது நடை பயிற்சி மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கான இடம் மட்டுமல்ல.
மண் மீதுள்ள சொர்க்கம் என போற்றப்படும் இங்கு பல தரப்பு மக்களும் சங்கமிக்கும் இடம். இங்கு இளைய தலைமுறையினர் நால்வர்- வெவ்வேறு பிரச்சனைகளுடன் வருகிறார்கள். அவர்களுக்கான பிரச்சனை தீர்ந்ததா? இல்லையா? என்பதுதான் இந்த பூங்காவின் கதை'' என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM