இன்றைய சூழலில் எம்மில் பலரும் வருவாய் என்பது நிலையானதாகவும், அதிலிருந்து குறையாமல் மேம்படுவதாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நடைமுறையில் பலருக்கும் இது சாத்தியமாவதில்லை. சிலருக்கு திடீரென்று குறிப்பிட்ட காலத்திற்குள் அதீதமாக பணம் சேரும்.
அதே நபருக்கு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு பணம் அனைத்தும் தீர்ந்து, கடன் வாங்கி, கடன் சுமையுடன் தள்ளாடும் நிலையும் ஏற்படும். இது சுழற்சி போல் இந்த பிறவி முழுவதும் ஏற்படும். இத்தகைய பாதிப்பை தான் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சகட தோஷம் என குறிப்பிட்டார்கள்.
இந்த சகட தோஷத்தை உருவாக்குவது ஒருவருடைய ஜாதகத்தில் குரு பகவானும் , சந்திர பகவான் பகவானும் தான். அவர்கள் ஜாதகத்தில் அமையப்பெற்ற இடத்தை பொறுத்தது இத்தகைய சகட தோஷத்தை உருவாக்குகிறார்கள்.
இதனை சக்கரம் என்று குறிப்பிடுவோர்களும் உண்டு. அதாவது வாழ்க்கையில் செல்வந்தராக ஒரு குறிப்பிட்ட காலமும்.... பிச்சைக்காரராக ஒரு குறிப்பிட்ட காலமும்... என ஏற்ற இறக்கத்துடன் இருந்தால்.. அவர் சகட தோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என புரிந்து கொள்ளலாம்.
இத்தகைய பாதிப்பிற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான மந்திர உச்சாடன வழிமுறையை வழங்கி இருக்கிறார்கள். இத்தகைய பாதிப்பிற்குள்ளாகி இருப்பதாக சோதிடர்கள் மூலமாகவோ... ஆன்மீக முன்னோர்கள் மூலமாகவோ அல்லது சுயமாகவோ உணர்ந்தால்... அவர்கள் அன்றைய நாளிலிருந்து காலையில் எழுந்தவுடன் நீராடி ஒன்பது முறை அல்லது 108 முறை 'ஓம் நமச்சிவாய நமக' எனும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
இதனை ஆயுள் முழுவதும் உச்சரிக்கும் வகையில் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் . அப்போதுதான் உங்களது வாழ்க்கையில் வருவாய் என்பது நிலையானதாகவும்... பயன் அளிக்க கூடியதாகவும் மாறும்.
தொகுப்பு: சுபயோக தாசன்















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM