பௌர்ணமி தினமான இன்று வானில் அதிசய நிகழ்வு தென்படும்

Published By: Digital Desk 3

06 Oct, 2025 | 02:28 PM
image

பௌர்ணமி தினமான இன்று திங்கட்கிழமை (06) வானில் சூப்பர் மூன் (Supermoon)  தென்படும். இது வழமையாக தென்படும் முழு சந்திரனை விட சுமார் 7 சதவீதம் பெரியதாக தென்படும் என  ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் (ACCIMT) தெரிவித்துள்ளது.

பௌர்ணமி தினங்களில் வழக்கமாக தென்படும் ஏனைய முழு சந்திரன்களுடன் ஒப்பிடும்போது, இன்றிரவு முழு சந்திரன் பெரியதாகவும்  பிரகாசமாக தென்பட இருப்பதால் சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது. சந்திரன் அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு அருகில் நகரும்போது, சூப்பர் மூன்கள் வருடத்திற்கு பல முறை நிகழ்கின்றன.

இந்த நிகழ்வு முழு சந்திரன் மற்றும் பௌர்ணமி ஆகிய இரண்டு கட்டங்களிலும் நிகழலாம் என ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் நிபுணர்கள் குறிப்பிட்டனர். 

கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் வழக்கத்தை விட சற்று அதிக அலை எழுச்சியை சந்திக்க நேரலாம். மேலும், இன்றிரவு பிரகாசமான முழு நிலவுக்கு அருகில் சனி கிரகம் நிலைநிறுத்தப்படுவதைக் காண வானியலாளர்களுக்கு அரிய வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

பௌர்ணமி தினத்தைக் குறிக்கும் போது வானியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு அற்புதமான இயற்கை நிகழ்வைக் காண சூப்பர் மூன் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இம்மாதத்தின் முதல் 12 நாட்களில் நாட்டில்...

2026-07-13 11:48:46
news-image

இலங்கை - உஸ்பெகிஸ்தான் இடையே புதிய...

2026-07-13 11:36:24
news-image

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க...

2026-07-13 11:20:46
news-image

மட்டக்களப்பு தளவாய் வீட்டுத்திட்ட வீதியை புனரமைக்குமாறு...

2026-07-13 11:00:38
news-image

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ;...

2026-07-13 11:13:39
news-image

இலங்கையின் அதிக வயதான பெண்களில் ஒருவரான...

2026-07-13 10:20:18
news-image

வேளாண்மைத் துறையை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்...

2026-07-13 09:54:26
news-image

களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீ...

2026-07-13 09:56:19
news-image

சில மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில்...

2026-07-13 09:25:14
news-image

பேராதனை, கொழும்பு ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களுடன்...

2026-07-13 09:18:27
news-image

டெங்கு அபாயத்தால் மூடப்பட்டிருந்த கட்புல, அரங்கேற்றக்...

2026-07-13 09:16:08
news-image

மஹரகமவில் துப்பாக்கியுடன் இளைஞர் கைது!

2026-07-13 09:06:29