யாழ்ப்பாண பல்கலைக்கழகம் பொன் விழா ஆரம்பம்

06 Oct, 2025 | 02:19 PM
image

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் திங்கட்கிழமை (06) பொன் விழா கொண்டாட்டங்கள் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கோலாகலமாக ஆரம்பமாகி நடைபெற்றது.

ஈழத் தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்து, பொன்னகவைப் பெருவிழா காண்கிறது. 

இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகமாக 1974 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 06 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட இவ் உயர்கல்வி நிலையம், இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக வியாபித்து நிற்கிறது.

ஐம்பதாவது ஆண்டைக் கடந்திருக்கும் இப்பல்கலைக்கழகத்தின் பன்னிரண்டு பீடங்களும் இணைந்து பொன்விழா நிகழ்வை  திங்கட்கிழமை  06 ஆம் திகதி வெகு விமரிசையாகக் இடம்பெற்ரது 

காலை 09.00 மணிக்கு ஆரம்பமான பொன் விழா நிகழ்வில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்ன பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.

வடக்கு மாகாண ஆளுநர்  நா.வேதநாயகன்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே. எல். வசந்தகுமார  சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டிருந்தனர்

பல்கலைக்கழகத்தின் ஐம்பது வருடகால கல்விப் பணி வரலாற்றை எடுத்தியம்பும் வகையில் அமைந்த வரலாற்றுப் பொக்கிஷமான “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன்அகவை வரலாறு” எனும் நூலும், பல்கலைக்கழகத்தின் பொன்னகவையை நினைவு கூரும் வகையிலான நினைவு முத்திரை வெளியீடும இந்நிகழ்வில் நடைபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடெல் நிறுவனத்தில் நத்தார் தினத்தை வரவேற்கும்...

2025-11-14 18:52:47
news-image

பங்களாதேஷ் டஃபோடில் சர்வதேச பல்கலைக்கழகத்தின் இணைப்...

2025-11-14 18:38:46
news-image

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் “மலையகத் தேசியம்...

2025-11-12 10:43:52
news-image

கலாமித்ரா விருது விழாவை முன்னிட்டு மகளிருக்குப்...

2025-11-11 17:22:27
news-image

வெள்ளவத்தையில் புதிதாக திறக்கப்பட்ட வீரகேசரி விளம்பர...

2025-11-11 14:19:39
news-image

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் பொறுப்புக்கூறலும் ;...

2025-11-11 11:05:45
news-image

இலங்கை - இந்திய 'சமஸ்கிருத மஹோத்ஸவம்'...

2025-11-10 17:27:52
news-image

பனைசார் கைப்பணி பயிற்சி நெறியை நிறைவு...

2025-11-10 17:23:50
news-image

சுவிற்ஸர்லாந்தில் தோ இத்தோசுக்காய் கராத்தே சுற்றுப்போட்டி

2025-11-10 16:18:16
news-image

பயிற்சிகளமாக பரிணமித்த ஹைக்கூ  கவியரங்கம் 

2025-11-10 07:14:11
news-image

குளோபல் வர்த்தக மாநாட்டிற்கு நியூ சவுத்...

2025-11-08 19:57:18
news-image

சைவமங்கையர் வித்தியால பரிசளிப்பு விழா

2025-11-08 13:52:50