“டுபாய்” என்ற பெயரில் இயங்கி வந்த வாட்ஸ்அப் குழு ; இளம் தம்பதி கைது!

06 Oct, 2025 | 01:39 PM
image

குருணாகல் - பொல்கஹவெல நகரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) பிற்பகல் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளம் தம்பதி ஒன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொல்கஹவெல பொலிஸார் தெரிவித்தனர். 

பொல்கஹவெல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களான இளம் தம்பதி கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 21 மற்றும் 27 வயதுடைய இளம் தம்பதி என பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர்களான இளம் தம்பதியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் பொல்கஹவெல - மாவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 08 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இளம் தம்பதியிடம்  கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் மொத்த நிறை 50 கிராம் ஆகும். 

சந்தேக நபர்களான இளம் தம்பதி “டுபாய்” என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்று இயங்கி வந்துள்ள நிலையில் அந்த வாட்ஸ்அப் குழுவில் ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்கஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-08-11 06:15:18
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு நீதித்துறைக்கு மரண...

2026-08-11 06:13:40
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்புக்கு எதிராக பாடலி...

2026-08-11 06:10:23
news-image

வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்...

2026-08-11 05:27:31
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாற்றுவது நாட்டுக்கு...

2026-08-10 14:02:40
news-image

அரசாங்கம் பொலிஸாரை அரசியல் தேவைக்காகப் பயன்படுத்துகிறது...

2026-08-10 16:44:28
news-image

சாகர காரியவசம் கைது செய்யப்படுவார் என...

2026-08-10 17:22:21
news-image

நீர்க்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தின் உண்மையான பின்னணியை...

2026-08-10 16:53:32
news-image

உயிர்த் தியாகம் செய்தேனும் 22ஆம் திருத்தத்தை...

2026-08-10 17:23:58
news-image

பிரதம நீதியரசருக்கு எதிராக அவதூறு ;...

2026-08-10 19:09:00
news-image

மலேசியாவில் கைது செய்யப்பட்ட 'சிவப்பு எச்சரிக்கை'...

2026-08-10 20:53:37
news-image

போதைப்பொருள் பரிசோதனைக்கு  அதிநவீன நடமாடும் ஆய்வுகூட...

2026-08-10 20:52:11