100 டெஸ்ட் போட்டிகளுக்கு செய்தி சேகரித்த இந்தியாவின் விஸ்டன் சஞ்சிகை விளையாட்டுத்துறை ஊடகவியலாளருக்கு கௌரவமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.ஸி. மைதானத்தில் இன்று ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. 

இதன்போதே இந்த கௌரவிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் விஸ்டன் சஞ்சிகையின் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் கௌஷிக், 100 டெஸ்ட் போட்டிகளை செய்தியாக எழுதியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு இந்திய அணியின் தலைவர் விராட் கோலி வீரர்கள் கையொப்பமிட்ட ஜேர்சியொன்றை அவருக்கு வழங்கி கௌரவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய ஊடகவியலாளரை இலங்கை விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்களும் கௌரவித்து அவருக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கி வைத்துள்ளனர்.