(எம்.மனோசித்ரா)
அரச நிதி பற்றிய குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்திற்கான நிதியுதவியின் வட்டி விகித அமைப்பை மாற்றுவதற்கான முன்மொழிவு குறித்து கவலை தெரிவித்துள்ளார். இது நாட்டின் கடன்பெறும் செலவுகளை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள ஹர்ஷ டி சில்வா, ஏற்கெனவே தாமதமாகி, அதிகரித்து வரும் வட்டிச் சுமையால் பாதிக்கப்பட்டிருக்கும் 226 பில்லியன் ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டம், நடந்து வரும் நிதி மற்றும் ஒப்பந்த நிச்சயமற்ற தன்மைகளால் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸாநாயக்கவின் கீழ் பெரும் ஆரவாரத்துடன் இத்திட்டம் மீண்டும் தொடங்கப்பட்ட போதிலும், பிரதான ஒப்பந்ததாரர்களின் உரிமைகோரல்கள் தொடர்பாகவும், திருத்தப்பட்ட 500 மில்லியன் டொலர் கடன் வசதி தொடர்பாக சீனா எக்ஸிம் வங்கியுடனும் பேச்சுவார்த்தைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே உள்ள 15 வருட நிலையான 2.5 சதவீத வட்டி வீதத்திலிருந்து, குறைந்தபட்சம் 2.5 சதவீதம் மற்றும் அதிகபட்சம் 3.5 சதவீதம் என்ற அளவில் ஒரு மாறுபடும் விகிதத்திற்கு மாறுவதற்கான நெடுஞ்சாலைகள் அமைச்சின் முன்மொழிவு குறித்து அரச நிதி பற்றிய குழு குழப்பமடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்ட கால சீனக் கடன் விகிதங்களில் எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால், இரு தரப்பினருக்கும் சமமான நன்மைகளை வழங்கும் ஒரு நியாயமான மற்றும் சமநிலையான ஒப்பந்தத்தை உறுதி செய்யுமாறு போக்குவரத்து அமைச்சை கோப்குழு வலியுறுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM