யாழ். வடமராட்சி வல்லிபுரத்து ஆழ்வார் ஆலய தேர் திருவிழா

05 Oct, 2025 | 04:39 PM
image

யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லிபுரத்து ஆழ்வார் ஆலய தேர் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (05)  சிறப்பாக இடம்பெற்றது.

கணபதீஸ்வரக் குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்களால் கிரியைகள் நிகழ்த்தப்பட்டன. காலை 7:30 மணியளவில் வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றதனை தொடர்ந்து சரியாக 9:30 மணியளவில் வல்லிபுரத்து ஆழ்வார் தேரிலேறி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்றைய தேரத்திருவிழாவில் அடியவர்கள் அங்க பிரதிஷ்டை, பால் காவடி, செடில்காவடி, துக்கு காவடி, கற்பூரச்சட்டி என பல்வேறு வகையில் நேறறிக்கடன்களை நிறைவேற்றினர்.

இந்த தேர் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர் தேசங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வல்லிபுரத்து ஆழ்வாரை தரிசித்தனர்.

பக்தர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகளை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து சங்கம் என்பன மேற்கொண்டிருந்தனர்.

மக்களுக்கான பாதுகாப்பு ஒழுங்குகளை காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் தலமையில், பருத்தித்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் கண்காணிப்பின் கீழுள்ள பொலிஸ் குழுவினர் நெறிப்படுத்தினர்.

இதேவேளை திங்கட்கிழமை (05)  இடம்பெறவுள்ள சமுத்திர திருவிழாவிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடெல் நிறுவனத்தில் நத்தார் தினத்தை வரவேற்கும்...

2025-11-14 18:52:47
news-image

பங்களாதேஷ் டஃபோடில் சர்வதேச பல்கலைக்கழகத்தின் இணைப்...

2025-11-14 18:38:46
news-image

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் “மலையகத் தேசியம்...

2025-11-12 10:43:52
news-image

கலாமித்ரா விருது விழாவை முன்னிட்டு மகளிருக்குப்...

2025-11-11 17:22:27
news-image

வெள்ளவத்தையில் புதிதாக திறக்கப்பட்ட வீரகேசரி விளம்பர...

2025-11-11 14:19:39
news-image

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் பொறுப்புக்கூறலும் ;...

2025-11-11 11:05:45
news-image

இலங்கை - இந்திய 'சமஸ்கிருத மஹோத்ஸவம்'...

2025-11-10 17:27:52
news-image

பனைசார் கைப்பணி பயிற்சி நெறியை நிறைவு...

2025-11-10 17:23:50
news-image

சுவிற்ஸர்லாந்தில் தோ இத்தோசுக்காய் கராத்தே சுற்றுப்போட்டி

2025-11-10 16:18:16
news-image

பயிற்சிகளமாக பரிணமித்த ஹைக்கூ  கவியரங்கம் 

2025-11-10 07:14:11
news-image

குளோபல் வர்த்தக மாநாட்டிற்கு நியூ சவுத்...

2025-11-08 19:57:18
news-image

சைவமங்கையர் வித்தியால பரிசளிப்பு விழா

2025-11-08 13:52:50