ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 1,248 கிலோ ஹெரோயின் மீட்பு - பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

05 Oct, 2025 | 02:21 PM
image

(நமது நிருபர்)

இவ்வருடம் ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில்  1,248 கிலோ கிராம் ஹெரோயின்,  1,852 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள்  ஆகியன மீட்கப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மினுரசெனரத்  தெரிவித்திருந்தார்.

பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைத் தொடர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் உள்ள சகல  பொலிஸ் பிரிவு மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நாளாந்தம்  விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேபோல் இந்த நடவடிக்கைகளின் போது பெருமளவான போதைப்பொருளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தரவுகளுக்கமைய இவ்வருடம் ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில்  1248 கிலோ கிராம்ஹெரோயின், 1,852 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியன மீட்கப்பட்டுள்ளது. 

மேலும்  14,221 கிலோ கிராம் கஞ்சா,  29 கிலோ கிராம் கொக்கைன்,  506 கிலோ கிராம் ஹசிஸ், 35 இலட்சத்து 79 ஆயிரத்து 339 போதை மாத்திரைகள் மற்றும் போதை வில்லைகளும் மீட்கப்பட்டுள்ளன. 

போதைப்பொருள் தொடர்பில் தகவல் அளிப்பதற்காக பொலிஸ்மா அதிபரால் இவ்வருடம்  071-8598888 என்னும் விசேட வாட்சப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், மாகாணத்துக்குப் பொறுப்பான சகல சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களையும் தொடர்பு கொண்டு தகவல் அளிப்பதற்கான தொலைபேசி இலக்கமும் பொலிஸ் தலைமையகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.  

தற்போது அதனுடன் இணைந்ததாக மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் கீழ் பணிபுரியும் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பொலிஸ் வளையத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் களுக்கும் இனிவரும் நாட்களில் பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துப்பாக்கி இயங்காமையால் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச்...

2026-09-07 00:41:12
news-image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான...

2026-09-07 00:38:06
news-image

ஜனாதிபதியின் பிறந்த ஊரில் சுற்றாடல் அழிவு:...

2026-09-06 12:33:31
news-image

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சோம் : மனோ...

2026-09-06 12:33:56
news-image

தேசிய செயற்கை நுண்ணறிவுக் கொள்கையை நடைமுறைப்படுத்த...

2026-09-06 12:34:33
news-image

அனைத்து விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளையும் உடன்...

2026-09-06 12:53:14
news-image

நாமல் கைது அரசியல் பழிவாங்கல்; திட்டமிட்டபடி...

2026-09-06 13:06:23
news-image

ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு...

2026-09-06 14:41:52
news-image

அநுர அரசாங்கம் நாட்டின் இறையாண்மையை அடகு...

2026-09-06 14:27:30
news-image

அநுரவின் வீதி மூடல் கெடுபிடிகளுக்கு பொதுஜன...

2026-09-06 16:13:24
news-image

225 பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும்...

2026-09-06 16:14:05
news-image

ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் அழிக்கும் செயற்பாடுகளில் அரசு...

2026-09-06 17:00:12