சிவபூமியாம் திருமூலரால் போற்றப்படும் இலங்காபுரியில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் இலங்கை ஷீரடி என மக்களால் போற்றப்பட்டுவரும் தாமரைக்குளம் ஷீரடி சாயி கருணாலயத்தில் இடம்பெற்ற விஜயதஷமி பெருவிழா ஆனது மிக சிறப்பாக இடம்பெற்றது.
இன் நிகழ்வானது ஷீரடி சாயி கருணால ஸ்தாபகர் திருமதி சீதா விவேக் அவர்களின் முழு அனுசரனையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் இந்தியா பிரபல புகழ் ஆன்மீக பேச்சாளர் திரு.சுமதி ஸ்ரீ அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இதன் போது திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட 500 க்கு மேற்பட்ட மாணவர்களினை ஒன்றிணைத்து மாபெரும் பஜனை நிகழ்வு மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகளும் இடம்பெற்றதுடன் இந்தியா பிரபல புகழ் ஆன்மீக பேச்சாளர் சுமிதி ஸ்ரீ அவர்களின் ஆன்மீக உரையும் இடம்பெற்றதுடன் சுமதி ஸ்ரீ அவர்களுக்கு ஷீரடி சாயி கருணாலயத்தினால் ஈழத்தின் அடையாளமாக விளங்கும் வள்ளியின் திருவுருவம் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் நிகழ்வு ஒழுங்கமைப்பு ஏற்பாடுகள் திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திருவாளர்.உதயகுமார் அவர்களும் அம்பாரை மாவட்ட இந்துக்கலாச்சார வளவாளர் சனாதனன் மற்றும் பல ஆர்வலர்கள் கருணாலய நிர்வாகத்தினர் ஆகியோரின் ஓழுங்கமைப்பில் வெகு சிறப்பாக இடம்பெற்றதுடன்
இதன் போது கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டி சான்றிதழ்களும் விவேகாந்தனரின் போதனை நூல்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இவ் நிகழ்வில் இசை கருவிகள் மற்றும் பதியங்கள் பாடிய கலைஞர்களுக்கு நினைவு சின்னங்களும் பொன்னாடையும் போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இவ் நிகழ்வில் அதீதிகளாக மட்டக்களப்புமாவட்ட கலாச்சார உத்தியோகஸ்தர் குலநாயகம் அம்பாரை மாவட்ட கலாச்சார உத்தியோகஸ்தர் ஜெயராஜி கிழக்கு இலங்கை சொற்பொளிவு ஒன்றியத்தின் இணைப்பாளர் மற்றும் கருணாலய நிர்வாகத்தினர் திருக்கோவில் பிரதேச பொது அமைப்புக்கள் , திருநாவுக்கரசு குருகுலத்தின் பணிப்பாளர் உட்பட பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM