(லியோ நிரோஷ தர்ஷன்)
எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு அதிகரிப்பு மற்றும் அவற்றின் ஒன்றிணைவு குறித்து அச்சம் கொண்டுள்ள அரசாங்கம், ஒரு ஹிட்லர் போக்கிலான செயற்பாட்டை வெளிப்படுத்துவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க கடுமையாகச் சாடியுள்ளார்.
எதிரணியினருடன் அரசியல் ரீதியான எந்தப் பிரச்சினைகளாக இருந்தாலும், உள்ளூர் அரசியல் மேடைகளில் கருத்து தெரிவித்திருக்க வேண்டும் என்றும், வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கை குறித்தும் இங்குள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் விமர்சனங்களை முன்வைப்பது முறையற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்ததோடு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளுக்கு வரலாற்று உதாரணங்களைக் கொண்டு பலத்த கண்டனம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
1933 ஆம் ஆண்டு ஜேர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தபோது, அவருக்கு 50 வீதத்திற்கும் அதிகமான ஆதரவு ,ருக்கவில்லை. ஹிட்லரின் கட்சி வெறும் 44 வீதமான வாக்குகளையே பெற்றது. எனவே, தனது அதிகாரத்தைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்காகவே ஹிட்லர் அன்று எதிர்க்கட்சிகளை அழித்தார்.
கட்சிகளை மாத்திரமல்லாமல் எதிர்க்கட்சி அலுவலகங்களையும் இல்லாதொழித்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், செக்கோஸ்லோவியா மற்றும் ஹங்கேரியைக் கைப்பற்ற வேண்டிய தேவை கம்யூனிஸ்ட்களுக்கு இருந்தது. அங்கு சோவியத் படை மிக வலுவாக வேரூன்றி இருந்தது. இருப்பினும் செக்கோஸ்லோவியா நிறுவனரின் புதல்வர் வெளியுறவு அமைச்சகக் கட்டிடத்தில் நான்காவது மாடி ஜன்னலிலிருந்து தூக்கி எறியப்பட்டார். இந்த விடயம் அன்றைய எதிர்க்கட்சி பாராளுமன்றக் குழுவில் விவாதிக்கப்பட்டது.
ஜனாதிபதியும் அவரது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ,லங்கையில் தற்போது செய்வது என்ன? ஜனாதிபதி அநுரவுக்கு வெறும் 44 வீதமான வாக்குகளே உள்ளன. மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்து வருகிறது. ,தனைத் தடுக்கவே அவர் கைது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரவின் மற்றொரு முயற்சி நீதித்துறையை அடிபணியச் செய்வதாகும். குறைந்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஹிட்லர் தனது அதிகாரத்தைத் தக்கவைக்க எதிர்க்கட்சிகளை ஒழித்தது போலவே, தேசிய மக்கள் சக்தியும் அதே வழியில் எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதாகவும், நீதித்துறையைக் கட்டுப்படுத்த முயல்வதாகவும் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டினார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM