துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட சந்தேக நபர், ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

Published By: Digital Desk 1

05 Oct, 2025 | 10:00 AM
image

மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அபேசிங்காராம வீதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர், கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 22 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, நேற்று சனிக்கிழமை (04) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது, கடந்த செப்டம்பர் 06ஆம் திகதி மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஞ்சிகாவத்தை பகுதியில், துப்பாக்கிச் சூடு நடத்தி, கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் முன்னர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக் கடற்படையின் படகு விபத்து: தொடரும்...

2026-08-16 13:04:58
news-image

ஷங்காய் மாநாட்டிற்கு செல்லும் ஜனாதிபதி அநுர

2026-08-16 08:55:06
news-image

ஆகஸ்ட் 30-இல் சர்வதேச மாநாடு: காணாமல்...

2026-08-16 08:56:43
news-image

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரிடமிருந்து கிடைக்கும்...

2026-08-16 11:34:51
news-image

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சரை...

2026-08-16 09:28:15
news-image

‘ஸ்பைடர் வுமன்’ என்றழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரி...

2026-08-16 08:40:39
news-image

சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி வழி...

2026-08-16 08:39:58
news-image

22 ஆவது திருத்தம் செவ்வாய் பாராளுமன்றில்...

2026-08-16 08:39:12
news-image

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சி 4 -...

2026-08-16 09:24:32
news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

கடுவலை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து...

2026-08-16 10:06:59
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27