இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய துடுப்பாட்ட மற்றும் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளர்கள் !

Published By: Digital Desk 1

05 Oct, 2025 | 08:24 AM
image

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) தேசிய கிரிக்கெட் அணிக்கு இரு முக்கியப் பயிற்சியாளர்களை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அந்த வகையில், துடுப்பாட்ட பயிற்சியாளராக ஜூலியன் வூட் நியமிக்கப்பட்டுள்ளதுடன், சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராக ரெனே ஃபெர்டினாண்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

துடுப்பாட்டப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள, ஜூலியன் வூட், க்கு  ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்,  ஓராண்டு காலத்திற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

"பவர் ஹிட்டிங் திட்டத்தை" (Power Hitting Program) உருவாக்கியவர் வூட். இவர் துடுப்பாட்ட நுட்பங்களை நவீன பயிற்சி முறைகள் மற்றும் உயிரியக்கவியல் (Biomechanics)உடன் ஒருங்கிணைத்து வீரர்களின் துடுப்பாட்டத் திறனை (Hitting Power) அதிகரிக்கச் செய்வதில் சிறந்தவர் .

சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள, ரெனே ஃபெர்டினாண்ட்ஸ் இன் நியமனம் செப்டம்பர் 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.

மணிக்கட்டு மற்றும் விரல் சுழற்பந்து இரண்டிலும் நிபுணத்துவம் பெற்ற ரெனே ஃபெர்டினாண்ட்ஸ், இதற்கு முன்னர் நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு (NZC)உயிரியக்கவியல் ஆலோசகராகவும் (Biomechanics consultant)பணியாற்றியுள்ளார்.

அங்கு அவர் முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு செயல்திறன் மதிப்பீடுகள் (Performance evaluations) மற்றும் உபாதை அபாய மதிப்பீடுகளை(Injury-risk assessments) மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானுக்கு எதிராக ஆறுதல் வெற்றியையாவது ஈட்டுமா...

2025-11-16 12:13:57
news-image

ஆசிய கிண்ண உதய தாரகைகள் ரி20...

2025-11-16 01:41:11
news-image

டிஎஸ்ஐ சுப்பர் ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டம்...

2025-11-16 01:36:44
news-image

'எல்லா புகழும் என் தந்தைக்கே, அவர்...

2025-11-15 19:29:40
news-image

துடுப்பாட்டத்தில் இந்தியாவும் தடுமாறிய முதல் டெஸ்டில்...

2025-11-15 17:51:50
news-image

பாபர் அஸாம் சதம், ஸமான், ரிஸ்வான்...

2025-11-15 10:42:20
news-image

பாகிஸ்தானுடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில்...

2025-11-14 19:27:42
news-image

பும்ராவின் 5 விக்கெட் குவியலின் பலனாக...

2025-11-14 18:36:10
news-image

பிக்கிள் பால் விளையாட்டுப் போட்டி வீரர்களை...

2025-11-14 18:35:04
news-image

இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்...

2025-11-14 15:08:13
news-image

குழப்பகரமான சூழ்நிலைக்கு பின்னர் இலங்கை -...

2025-11-14 13:37:02
news-image

முல்லைத்தீவு உள்ளக அரங்கில் மாகாண மல்யுத்த...

2025-11-14 12:49:19