இன்றைய திகதியில் எம்மில் பலருக்கு பசி உணர்வு அதிகமாக இருக்கும் போது லேசாக தலை சுற்றல் பாதிப்பு ஏற்படும். வேறு சிலருக்கு அவர்கள் நடக்கும் போதோ அல்லது மாடிப்படிகளில் ஏறும்போதோ அல்லது வேறு ஏதேனும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போதோ திடீரென்று சில வினாடிகள் வரை தலை சுற்றல் பாதிப்பு ஏற்படும்.
இதனை பலரும் துல்லியமாக அவதானிப்பதில்லை. தலை சுற்றல் பாதிப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு சென்று வைத்தியர்களை சந்தித்து குறிப்பாக நரம்பியல் நிபுணர்களை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.
எம்மில் சிலருக்கு தலைசுற்றல்- வாந்தி- குமட்டல்- நடக்கும் போது சமநிலையை பராமரிக்க இயலாமல் ஒரு பக்கமாக சாய்வது அல்லது விழுந்து விடுவது- போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்.. நீங்கள் தீவிரமான தலை சுற்றல் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறீர்கள் என பொருள் கொள்ளலாம்.
உங்களுடைய மூளைப் பகுதியில் உள்ள பிரத்யேக நரம்புகளில் வீக்கம் அல்லது அடைப்பு பாதிப்பு ஏற்பட்டால்.. இத்தகைய அறிகுறி உண்டாகும். அதே தருணத்தில் இத்தகைய அறிகுறி வேறு சில பாதிப்புகளையும் வெளிப்படுத்துவதால்.. வைத்தியர்கள் பரிந்துரைக்கும் நரம்பியல் திறன் பரிசோதனை உள்ளிட்ட சில பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பரிசோதனைகளில் கிடைக்கும் முடிவை பொறுத்து வைத்தியர்கள் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து, முழுமையான நிவாரணம் அளிக்கும் வகையிலான பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்குவர்.
மேலும் இத்தகைய பாதிப்பிலிருந்து மீள்வதற்கு பிரத்யேக இயன்முறை சிகிச்சைகளையும், சில தெரபிகளையும் வைத்தியர்கள் பரிந்துரைக்கக்கூடும். இதனையும் முழுமையாக மேற்கொண்டால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
வைத்தியர் அருண் விக்னேஷ் தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM