எம்முடைய உடம்பிலும், மனதிலும் வலிமை இருக்கிறது. அதே போல் நோயும் இருக்கிறது. மன அழுத்தமும் இருக்கிறது. இதற்கு மூல காரணமான கடன் சுமையும் இருக்கிறது. இதிலிருந்து விடுபடுவதற்கான வழிகளை தான் நாளாந்தம் காலையில் கண்விழித்ததும் தேடிக் கொண்டிருக்கிறோம்.
சிலருக்கு மட்டுமே இதற்கான சூட்சமத்தை உணர்ந்து.. அதனை பாவித்து, கடன் சுமையிலிருந்து வெளியேறி விடுவர். ஆனால் பலரும் இதற்கான சூட்சமத்தை தெரிந்து கொள்ளாமல்... கடன் சுமையிலேயே... தங்களை கரைத்துக் கொண்டு விடுவர். இந்நிலையில் கடன் சுமையிலிருந்து மீள்வதற்கான எளிய குறிப்புகளை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வழங்கி இருக்கிறார்கள்.
கடன் சுமை அதிகரித்துக் கொண்டிருந்தாலும் அல்லது கடன் வாங்குவதை நிறுத்த இயலாது என்றாலும்... கடனை திருப்பி செலுத்த வேண்டும் என மனதில் உறுதி இருந்தால்.. கீழ்க்கண்ட குறிப்புகளை பின்பற்றலாம்.
செவ்வாய் கிழமைகளில் குளிகை நேரத்தை முதலில் தெரிவு செய்து கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமைகளில் குளிகை நேரம் என்பது மதியம் 12 மணி முதல் 1:30 வரை நீடித்திருக்கும். செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரையையும் தெரிவு செய்து கொள்ளவும்.
அதில் ஒரு ஓரை - மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை நீடித்திருக்கும். அடுத்ததாக நீங்கள் கடனை சிறிதளவாவது திருப்பிக் கொடுக்கும் தருணத்தை மேலும் துல்லியமாக அவதானிக்க வேண்டும். அதாவது செவ்வாய்க்கிழமை குளிகை தருணம் + செவ்வாய் ஓரை தருணம்+ என இரண்டும் இணைந்திருக்கும் மதியம் ஒரு மணி முதல் 1:30 மணிக்குள்ளாக.. நீங்கள் கடன் வாங்கியவரிடம் சிறிய தொகையாவது திருப்பித் தாருங்கள். அன்று பவ கரணத்தின் தருணமாக இருந்தால்... உங்களால் கடன் சுமையிலிருந்து விடுதலை பெற முடியும். பவ காரணமாக இல்லாத இருந்தாலும் உங்களால் கடன் சுமையிலிருந்து வெளியே வர இயலும்.
இந்த சூட்சம நேரத்தை உணர்ந்து கொண்டு, கடனை திருப்பி செலுத்தி விடுவேன் என்ற மன உறுதியுடன் ... கடன் வாங்கியவரிடம் சிறிய தொகையை வழங்கினால்... இந்த பிரபஞ்சம் - உங்களது கடன் முழுவதும் அடையும் வகையிலான வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM