கலை, இலக்கியப் பேராளுமைகளுடன் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாணசபையின் மேனாள் அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் மேற்கொண்ட நேர்காணல்களின் தொகுப்பு வேர்முகங்கள் என்ற பெயரில் எங்கட புத்தகங்கள் பதிப்பகத்தின் ஊடாக அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நூலுக்கான அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை (05) , பிற்பகல் 3 மணிக்குத் தண்ணீரூற்று (குமுழமுனைச் சந்தி) முள்ளியவளையில் அமைந்துள்ள பரி-மத்தியா ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
முல்லை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி. குணபாலன் தலைமையில் நடைபெற உள்ள இவ்வறிமுக விழாவில் கருத்துரைகளை ஊடகவியலாளர் தி. திவாகர் மற்றும் சமூக ஆய்வாரள் தெ. மதுசூதனன் ஆகியோர் நிகழ்த்த உள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் முதுநிலை விரிவுரையாளர் க. அருந்தாகரன் அறிமுக உரையை நிகழ்த்த, நூலின் சிறப்புப் பிரதிகளை மூத்த பாடலாசிரியர் பெ. செல்லக்குட்டி வழங்கி வைப்பார்.
பல்துறைக் கலைஞர் செ.மயில்வாசன் தொகுத்து வழங்கவுள்ள இந்நிகழ்ச்சியில், வரவேற்புரையை கவிஞர் யோ, புரட்சி ஆற்ற, நிகழ்ச்சியின் இறுதியில் ஏற்புரையை நூலாசிரியர் பொ. ஐங்கரநேசன் நிகழ்த்தவுள்ளார்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM