மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான முடிவு இரு வாரங்களில் அறிவிக்கப்படும் - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

Published By: Digital Desk 1

04 Oct, 2025 | 04:11 PM
image

மின்சாரக் கட்டண திருத்தத்தை 6.8 சதவீதத்தால் அதிகரித்தல் தொடர்பான இலங்கை மின்சார சபையின் முன்மொழிவுகள் குறித்து இரு வாரங்களில் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக இறுதி முடிவு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சாரக் கட்டணங்களைத் திருத்துவதற்கான பொது ஆலோசனை செயன்முறை தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 08ஆம் திகதி மேல் மாகாண ஆலோசனையின் இறுதி அமர்வு நடைபெற்றதன் பின்னர், கட்டணங்களைத் திருத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணத் திருத்தத்தில் மின்சாரச் சட்டம் மற்றும் மின்சாரக் கட்டண விலை சூத்திரம் பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2025 ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கை மின்சார சபை ஆயிரத்து 769 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை பதிவு செய்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதனை சரி செய்ய 6.8 சதவீத மின்சார கட்டண உயர்வு முன்மொழியப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடு தழுவிய சோதனைகளில் 431 தரமற்ற...

2026-08-08 13:05:24
news-image

தொம்பகஹவெல - பஹதராவ குளத்தில் நீராடச்...

2026-08-08 12:48:03
news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51
news-image

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவது...

2026-08-08 11:24:38
news-image

பிரகீத் எக்னெலிகொட வழக்கு: விசேட மூவர்...

2026-08-08 10:56:46
news-image

பரவிபாஞ்சான் பாலத்தை புனரமைக்குமாறு கோரி மக்கள்...

2026-08-08 10:53:50
news-image

யாழில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாவிகளை இலக்காக...

2026-08-08 10:39:40
news-image

சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த...

2026-08-08 10:34:00
news-image

புளியங்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞர்...

2026-08-08 09:57:10
news-image

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை:...

2026-08-08 09:54:46
news-image

இந்தியா–இலங்கை ஆடை வர்த்தக மாநாடு!

2026-08-08 09:47:56