இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னரான மீட்சி வலுவானது: கடன் மறுசீரமைப்பு நிறைவடையும் - IMF

Published By: Digital Desk 1

04 Oct, 2025 | 03:06 PM
image

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டம் தொடர்ந்து சுவாரஸ்யமான முன்னேற்றத்தை அடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

விரிவாக்கப்பட்ட நிதி வசதியானது, சர்வதேச நாணய நிதியத்தின்,கீழ் நாடு மீட்சிக்கான வலுவான நிலையை அடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

ஒக்டோபர் 2ஆம் திகதி வொஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய, சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கோசாக், இலங்கையின் பணவீக்கம் குறைவாகவே உள்ளதாகவும், அரசாங்கத்தின் வருவாய் முன்னேற்றம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், சர்வதேச இருப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னரான மீட்சி குறிப்பிடத்தக்கதாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பட்ஜெட்டில் வருவாய் - மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 2022 இல் 8.2 சதவீதத்திலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.5 சதவீதமாக மேம்பட்டுள்ளது, இதுவும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, இருப்பினும் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை "கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 1ஆம் திகதி, இலங்கையின் EFF ஏற்பாட்டின் நான்காவது மதிப்பாய்வை, சர்வதேச நாணய நிதியம் நிறைவு செய்துள்ளது.

இதன் மூலம் US$350 மில்லியன் ஆதரவை வெளியிட்டு மொத்த நிதியுதவியை US$1.74 பில்லியனாகக் கொண்டு வந்துள்ளது.

EFF இன் ஐந்தாவது மதிப்பாய்வை நடத்த, சர்வதேச நாணய நிதியத்தின் பணி தற்போது இலங்கையில் உள்ளது என்பதை கோசாக் உறுதிப்படுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புகையிரத பொது முகாமையாளரை பதவி விலகக்...

2026-09-16 23:26:17
news-image

புதிய சீனத் தூதுவர் வீ ஹுவாஷியாங்...

2026-09-16 22:09:21
news-image

ராஜபக்‌ஷ குடும்பத்தை இம்ரான் கான் அல்லது...

2026-09-16 16:49:17
news-image

இலங்கையில் புற்றுநோய் சிகிச்சைக்கு நெருக்கடி: மருந்து...

2026-09-16 16:22:25
news-image

இலங்கையை பிராந்திய நிதித் தொழில்நுட்ப மையமாக...

2026-09-16 16:46:15
news-image

மட்டக்குளி பகுதியில் கோர விபத்து –...

2026-09-16 22:07:10
news-image

மாணவர் குறைவான கிராமப்புற பாடசாலைகளை மூட...

2026-09-16 16:48:05
news-image

“சிரிலிய சவிய” நிதி மோசடி வழக்கு...

2026-09-16 19:27:20
news-image

தமிழ் பேசும் சமூகங்கள் நாட்டின் அரசியலை...

2026-09-16 20:29:10
news-image

நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கல்: செயற்கை...

2026-09-16 14:02:12
news-image

மன்னார் வைத்தியசாலையில் இந்திய நிதியுதவியுடன் அவசர...

2026-09-16 19:10:32
news-image

22ஆவது திருத்தத்துக்கு எதிராக இன்று கூட்டம்;...

2026-09-16 19:03:25