தலவாக்கலை கிரேட்வெஸ்டன் மலைத்தோட்டத்தில் மரையை வேட்டையாடிய சந்தேக நபர்களை, கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

மலைத் தோட்ட வனப்பகுதியிலிருந்து தோட்ட பகுதிக்கு இரைத்தேடி வந்த மரையொன்று வேட்டையாடப்பட்டுள்ளதுடன் அதனை இறைச்சியாக்க முயன்றுள்ளனர்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் இன்று வருகை தந்துள்ளனர்.  மரையை வேட்டையாடிய நபர்கள், பொலிஸார் வருவதை கண்டு, மரையை அவ்விடத்திலே விட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

பொலிஸார் மரையை மீட்டு வனப்பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

வேட்டையாடப்பட்ட மரை, சுமார் 250ற்கும் மேற்பட்ட கிலோ கிராம் எடையுடையது என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.