காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 251 பேரை ஹமாஸ் பணயக் கைதிகளாக காசா முனைக்கு கடத்திச் சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் மீது இஸ்ரேல் போர் அறிவித்து காசா முனையில் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். ஹமாஸிடம் உள்ள பணயக் கைதிகளில் பலரை இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையிலும், இராணுவ நடவடிக்கை மூலமும் மீட்டுள்ளது.
பணயக் கைதிகள் அனைவரையும் மீட்டு, ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தார். இந்த சூழலில், காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில்இ 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்தார். இந்தத் திட்டத்திற்கு நெதன்யாகு சம்மதம் தெரிவித்து உள்ளார் என கூறப்படுகிறது. டிரம்ப்பின் சமரச திட்டத்தை ஏற்க ஹமாஸ் இயக்கத்தினருக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில், அதை பரிசீலிப்பதாக ஹமாஸ் தெரிவித்திருந்தது.
தற்போது, இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு, டிரம்பின் 20 அம்ச திட்டங்கள் குறித்து மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், காசா அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தலைமைத்துவத்தை வரவேற்கிறோம் என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ (x) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“காசாவில் அமைதியைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில், ஜனாதிபதி டிரம்ப்பின் தலைமைத்துவத்தை நாங்கள் வரவேற்கிறோம். பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கான அறிகுறிகள், ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை குறிக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM