மன்னார் பேசாலை பொலிஸ் நிலைய தடுப்பு காவலிருந்த 34 வயது நபர் உயிரிழப்பு; பொலிஸார் அடித்ததால் மகன் மரணம் தாய் குற்றச்சாட்டு

Published By: Vishnu

04 Oct, 2025 | 04:19 AM
image

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  34 வயதுடைய  நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (3) காலை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் வவுனியா மாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (வயது-34) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,,,

பேசாலை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட கட்டாஸ்பத்திரி பகுதியில் வியாழக்கிழமை (2) மாலை  போதை பொருள்  தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.  

குறித்த நபரை பேசாலை பொலிஸார் துரத்தி பிடித்ததோடு, இவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பி ஓடியதாக  தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த நபரை பொலிஸார் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பின்னர் குறித்த நபர் பொலிஸ் நிலைய கூண்டில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (3) காலை குறித்த சந்தேக நபர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (3) காலை  6.30 மணியளவில் சடலம் பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் மன்னார் நீதிமன்ற பதில் நீதிவான் ஜெபநேசன் லோகு பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு சென்று  விசாரணைகளை முன்னெடுத்தார்.

இதனை அடுத்து பேசாலை பொலிஸ் நிலையத்திற்கும் சென்று பொலிஸ்  நிலைய சிறைக் கூடத்தையும் பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்தார்.

குறித்த சந்தேக நபர் பேசாலை  பொலிஸ் நிலையத்தின்  முதலாம் இலக்க தடுப்பு காவல் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலே சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழந்த  குறித்த நபரின் தாய்  பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு வெள்ளிக்கிழமை (3) காலை வருகை தந்து தனது மகனை பொலிஸார் அடித்து கொலை செய்துள்ளதாக அங்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலத்திற்கு எதிரான...

2026-11-10 00:08:24
news-image

நாட்டை சர்வாதிகாரப் பாதையில் கொண்டுசெல்ல அரசாங்கம்...

2026-11-09 16:34:17
news-image

அநுராதபுரம் புனிதப் பிரதேசத்தின் வரலாற்று, மதப்...

2026-11-09 17:18:49
news-image

ஞானசார தேரரை காவி உடையில் நீதிமன்றில்...

2026-11-09 21:12:11
news-image

கொழும்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதியும்...

2026-11-09 17:17:39
news-image

2030ஆம் ஆண்டுக்குள் 70 வீத புதுப்பிக்கத்தக்க...

2026-11-09 17:25:09
news-image

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் புதிய செயலாளராக...

2026-11-09 19:01:43
news-image

அடக்குமுறைச் சட்டங்கள் ஊடாக அதிகாரத்தைத் தக்கவைக்க...

2026-11-09 17:18:03
news-image

தொடர் கனமழையால் பதுளையில் வெள்ள அபாயம்...

2026-11-09 18:44:29
news-image

இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் நெருக்கடியை நோக்கிப்...

2026-11-09 17:36:14
news-image

காலி மீன்பிடித் துறைமுகத்தில் பாரிய தீ...

2026-11-09 17:37:59
news-image

பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்கிறது...

2026-11-09 16:17:37