Enterprising Fairs India, இலங்கை பிளாஸ்திக் மற்றும் இறப்பர் சங்கம் மற்றும் லயன்ஸ் கழகம் மாவட்டம் 306B2 ஆகிய அமைப்புக்களின் ஏற்பாட்டில் 4 ஆவது தடவையாகவும் இடம்பெறும் முழுமையான பிளாஸ்திக் கண்காட்சி நிகழ்வான COMPLAST நிகழ்வை முன்னிட்டு, பிளாஸ்திக் பொருட்களை பொறுப்புணர்வு மிக்க வழியில் முறையாக உபயோகித்து அவற்றை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் விதத்தில் அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் தனித்துவமான சைக்கிள் பவனி நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சைக்கிள் பவனி நிகழ்வானது, கொழும்பு 07 இலுள்ள சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பித்து நகரை வலம் வந்து, BMICH மண்டபத்தைச் சென்றடைந்தது. லயன்ஸ் மாவட்டம் 306B2 இன் மாவட்ட ஆளுனரான லயன் ஷியாமா  சில்வா MJF, இலங்கை பிளாஸ்திக் மற்றும் இறப்பர் சங்கத்தின் தலைவரான கோன்ராட் ப்ரிடியர்ஸ் மற்றும் Enterprising Fairs India நிறுவனத்தின் முகாமைத்துவப்பணிப்பாளரான பி. சுவாமிநாதன் ஆகியோர் இணைந்து சைக்கிள் பவனியை கொடியசைத்து ஆரம்பித்து வைத்திருந்தனர். 

இந்த பவனியில் 200 இற்கும் மேற்பட்ட லயன்ஸ் கழக அங்கத்தவர்கள் மற்றும் பிளாஸ்திக் தொழிற்துறை அங்கத்தவர்கள் ஓரணியாகக் கலந்துகொண்டு, மறுப்போம் - குறைப்போம் -மீள்பாவனை செய்வோம் - மீள்சுழற்சி செய்வோம் என்ற பிரச்சார செய்தியுடன் இலங்கையை சுத்தமாகப் பேணுவோம் என்ற விழிப்புணர்வைப் பரப்பும் முயற்சியையும் முன்னெடுத்திருந்தனர்.

இந்த சைக்கிள் பவனி நிறைவுற்றதைத் தொடர்ந்து, நாட்டில் இடம்பெறுகின்ற பிரதான வர்த்தக - வர்த்தக (b2b)நோக்குடைய கண்காட்சி நிகழ்வுகளுள் ஒன்றான COMPLAST 2017 (முன்னர் Sri Lanka Plast என்ற பெயரில் இடம்பெற்று வந்தது) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஆரம்பமாகியது. COMPLAST கண்காட்சி நிகழ்வானது கொழும்பு BMICH இன் நுகசெவன மண்டபத்தில் ஆகஸ்ட் 3 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரை தினசரி மு.ப. 10 மணி முதல் பி.ப 6 மணி வரை இடம்பெற்று வருவதுடன், Enterprising Fairs India (Pvt) Ltd நிறுவனத்தின் ஏற்பாட்டுடனும்,

பிளாஸ்திக் மற்றும் இறப்பர் சங்கத்தின் இணை ஏற்பாட்டுடனும், தேசிய சிறு கைத்தொழில் கூட்டுத்தாபனத்தின் (NSIC) ஆதரவுடனும் இடம்பெற்று வருகின்றது.

இந்நிகழ்வினை பெரு நகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரான கௌரவ பாட்டலி சம்பிக ரணவக்க உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் அறிவைப் பகிர்ந்து கொள்ளும் தொடர் அமர்வுகளும் இடம்பெறவுள்ளன. ஆகஸ்ட் 3 ஆம் திகதியன்று மு.ப 11.00 மணிக்கு BMICH மண்டபத்தில் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கான ஒன்றுகூடல் அமர்வொன்று இடம்பெறவுள்ளதுடன், மூலோபாய ஆலோசகரான சீ. பாப்பா ராவின் பிரதான உரையாக “பிளாஸ்திக் தொழிற்துறைகளின் வளர்ச்சியை முன்னெடுக்கும் காரணி” என்ற தலைப்பிலும், தொடர்ந்து பிளாஸ்திக் தொழிற்துறை ஆலோசகரான கிதாய் விஜேசுந்தரவால் “இலங்கை பிளாஸ்திக் தொழிற்துறை - சவால்கள் மற்றும் மூலோபாயங்கள்” என்ற தலைப்பில் மற்றுமொரு முக்கிய அமர்வும் இடம்பெறவுள்ளன. ஆகஸ்ட் 4 ஆம் திகதியன்று மு.ப 10.00 மணிக்கு Plastiblends இன் பேச்சாளர் ஒருவரால் Masterbatches பயன்பாடு தொடர்பில் கருத்தரங்கொன்றும் நடாத்தப்படவுள்ளது.

இந்தியா, சீனா, தாய்வான், தாய்லாந்து, மலேசியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து கலந்து கொள்ளும் கண்காட்சியாளர்களின் 130 இற்கும் மேற்பட்ட கண்காட்சிக்கூடங்கள் இந்நிகழ்வில் இடம்பெற்றுள்ளன. Blow Moulding இயந்திரங்கள், Extrusion இயந்திரங்கள், Auxiliary உபகரணங்கள்,பேக் தயாரிப்பு இயந்திரங்கள், மூலப்பொருட்கள், Masterbatch, Injection Moulding இயந்திரங்கள், அச்சிடல் மற்றும் Lamination இயந்திரங்கள் மற்றும் Mould அச்சுக்கள் என அனைத்தும் ஒரே கூரையின் கீழ் இங்கே இடம்பெற்றுள்ளதுடன், நாடுகள் மற்றும் பார்வையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குகின்றன.

Enterprising Fairs India (Pvt) Ltd நிறுவனத்தின் தலைமை அதிகாரியான பி. சுவாமிநாதன் கூறுகையில்,

 “எந்தவொரு தொழிற்துறையைப்பொறுத்தவரையிலும் கண்காட்சியாளர்களே அதனை முன்னெடுத்துச் செல்லும் உந்துசக்தியாக உள்ளனர். தொழிற்துறை தொடர்பில் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்களின் தற்போதைய மேம்பாடுகளை அவர்கள் காண்பிப்பதால், துறையின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவதில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

மேலும் கட்டுபடியாகும் செலவில் புதிய மற்றும் பொருத்தமான தொழில்நுட்பங்களை உள்வாங்கிக்கொள்வதற்கும் அவர்கள் துணை புரிகின்றனர். துறையின் வளர்ச்சியை அவர்கள் விரிவுபடுத்துவதுடன், அதன் மூலமாக புதிய தொழில் முயற்சியாளர்களையும், புதிய தொழில் வாய்ப்புக்களையும் தோற்றுவிக்கின்றனர்.” என்று குறிப்பிட்டார்

இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான Enterprising Fairs மற்றும் இலங்கை பிளாஸ்திக் மற்றும் இறப்பர் சங்கம் ஆகியன உள்நாட்டு பிளாஸ்திக் தொழிற்துறையின் வளர்ச்சியை முன்னெடுப்பது மட்டுமன்றி, இலங்கையிலிருந்து பிளாஸ்திக் முடிவு உற்பத்திகளை ஏற்றுமதி செய்யவும் உந்துசக்தியாக அமையும் என நம்புகின்றனர்.