கருப்பை நார்த்திசு கட்டிகள் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

03 Oct, 2025 | 05:26 PM
image

பெண்மணிகளின் கருப்பைகளில் நார்த் திசு கட்டிகள் இருப்பது இயல்பானது தான். பொதுவாக கருத்தரித்து பிரசவித்த பெண்மணிகளுக்கு இத்தகைய நார்திசு கட்டிகள் ஏற்படும்.

ஆனால் இவை ஒருபோதும் புற்று நோயாக மாற்றம் பெறாது. ஆனால் தற்போது ஒரு லட்ச பெண்மணிகளில் மூன்று முதல் ஏழு பெண்மணிகளுக்கு புற்றுநோயாக உருமாற்றம் பெறக்கூடிய கருப்பை நார்த் திசு கட்டிகள் ஏற்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. 

சில தருணங்களில் கருத்தரித்து பிரசிவித்த பெண்மணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத அதாவது புற்றுநோயாக உருமாற்றம் பெறாத தீங்கற்ற கட்டிகள் கூட அளவில் பெரிதாகவும்... எண்ணிக்கையில் அதிகமாகவும்... ஏற்படக்கூடும். இதற்கு நிச்சயம் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

மிக சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என கருதப்பட்ட கருப்பை நாத்திசு கட்டிகள் அதாவது மருத்துவ மொழியில் லியோமயோமா என குறிப்பிடும் கட்டிகள்- கருப்பையின் உள்பகுதியில் உள்ள ரத்த நாளத்தின் உள்புறம் அல்லது வெளி புறத்தில் உண்டாகி, அது புற்று நோயாக மாற்றம் பெறும்.

இந்த தருணத்தில் நோயாளிகள் திடீர் உடை எடை இழப்பு அதீத சோர்வு, சீரற்ற மாதவிடாய், அதீத ரத்தப்போக்கு மற்றும் இயல்பை விட அதிக நாள் ரத்தப்போக்கு, இடுப்பு வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், மலச்சிக்கல்... ஆகியவற்றை அறிகுறிகளாக உணர்வர்.  இத்தகைய தருணத்தில் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு சென்று மருத்துவ நிபுணரை அணுகினால்... அவர்கள் எம் ஆர் ஐ ஸ்கேன் மற்றும் திசு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள்.

பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில் சத்திர சிகிச்சை மற்றும் ஒருங்கிணைந்த சிகிச்சை ஆகியவை தீர்மானிக்கப்பட்டு, முதலில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும்.  இதற்காக தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சத்திர சிகிச்சை முறைகள் அறிமுகமாகி இருப்பதால்.. நோயாளிகளுக்கு கூடுதல் பலன் கிடைத்து வருகிறது.

வைத்தியர் ஆனந்தராஜா தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்றுநோய் பாதிப்பைக் கண்டறியும் நவீன பரிசோதனை

2026-09-09 15:23:55
news-image

அக்யூட் லிம்ப் இஸ்கிமியா எனும் கால்பகுதியில்...

2026-09-08 16:50:11
news-image

புரோஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2026-09-07 15:37:08
news-image

காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே...

2026-09-05 16:54:07
news-image

அதீத மனசோர்வு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-09-04 16:07:36
news-image

சைனஸ் வெனோசஸ் எட்ரியல் செப்டல் கோளாறு...

2026-09-03 16:43:45
news-image

பேடன்ட் டக்டஸ் அர்டெரியோசிஸ் எனும் பிறவி...

2026-09-02 17:10:39
news-image

ரெக்டோசிக்மாய்ட் புற்றுநோய் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-09-01 14:59:24
news-image

இண்டஸ்ஸஸ்செப்ஷன் எனும் குடலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2026-08-31 17:33:47
news-image

சிறுநீரக கற்களை நீக்கும் நவீன லேசர்...

2026-08-29 16:11:51
news-image

பல்மனரி அல்வியோலர் புரோட்டீனோசிஸ் எனும் நுரையீரல்...

2026-08-28 17:05:22
news-image

சிறுநீர் குழாய்களில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பிற்குரிய...

2026-08-27 16:38:50