தலவாக்கலை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மணல் கொண்டு சென்ற லொறியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலவாக்கலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர் நேற்று மாலை தலவாக்கலை வட்டகொட பிரதான வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மணலை அனுமதி பத்திரம் இல்லாமல் தலவாக்கலை பகுதியிலிருந்து வட்டகொட பகுதிக்கு கொண்டு செல்லும் போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன்பின்னர், கைப்பற்றப்பட்ட  மணலையும், வாகனத்தையும், சந்தேக நபரையும் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதுடன், அவரை நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக பொலிஸார்  தெரிவித்தனர்.