மன குழப்பத்திலிருந்து மீள்வதற்கான சூட்சம குறிப்புகள்..!

03 Oct, 2025 | 04:46 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலரும் திடீர் திடீர் என ஏற்படும் மாற்றங்களை அதற்கே உரிய இயல்புடன் ஏற்க இயலாமல் தடுமாறுகிறார்கள். இது பலருக்கும்... பல வகையினதான... மன குழப்பங்களை ஏற்படுத்துகிறது.

எம்மில் பலரும் பயணத்தின் போது திடீரென்று ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதிருக்கும். அந்தத் தருணத்தில் எம்முடைய மனம் குழப்பம் அடையுமே தவிர.. தெளிவாக சிந்திக்காது.

இதுபோன்று தவிப்பவர்களுக்கு அதாவது அடிக்கடி மனக்குழப்பத்திற்கு ஆளாகி தவிப்பவர்களுக்கு... எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான குறிப்புகளை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

பொதுவாக உங்களது ஜாதகத்தில் சந்திர பகவான் எங்கு அமையப்பெற்றிருக்கிறாரோ...!  என்பதை பொறுத்தும்.... அவர் வளர்பிறையாக இருக்கிறாரா? அல்லது தேய்பிறையாக இருக்கிறாரா? என்பதை பொறுத்தும் தான் மன நலம் அமையும்.

வளர்பிறை சந்திர பகவானை விட... தேய்பிறை சந்திர பகவானைப் பெற்றிருப்பவர்களுக்கு மனப்பதட்டம் - மனக்குழப்பம் போன்றவை ஏற்படுவது அதிகம் என ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள் ‌

  • இவர்கள் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு அபிஷேகத்திற்கு நாளாந்தம் பால் வாங்கிக்கொடுத்தால்.. அதனூடாக நிவாரணம் கிடைக்க பெறும்.
  • திங்கட்கிழமைகளில் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று நவகிரக சன்னதி - சந்திர பகவானின் சன்னதி - அம்பாளின் சன்னதி அல்லது முழு ஆலயம் ஏதேனும் ஒரு பகுதியை தெரிவு செய்து கொண்டு, உழவாரப்பணி மேற்கொள்ள வேண்டும்.
  • உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் செல்லப்பிராணிகள் தாகத்திற்கு நீர் அருந்துவதற்கான ஏற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் செல்ல பிராணிகளுக்கு உணவு அல்ல... தாகத்திற்கு நீரை வழங்க வேண்டும்.

இதனை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பொழுது உங்களது அகமும் , புறமும் சீராக்கப்பட்டு... மனநலம் மேம்பட்டு... உங்களது தோற்றத்தில் கம்பீரமும், பேரழகும் தோன்றுவதை அனுபவத்தில் காணலாம்.

தொகுப்பு‌: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெப்ரவரி 29 ஆம் திகதி பிறந்தவர்களுக்கு...

2026-09-07 15:57:03
news-image

அசைவ உணவை யார் தவிர்த்திட வேண்டும்?

2026-09-05 16:50:55
news-image

ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற!

2026-09-04 15:49:33
news-image

கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

2026-09-03 16:58:02
news-image

காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-09-02 17:08:27
news-image

திருஷ்டி தோஷங்கள் நீங்க!?

2026-09-01 14:59:16
news-image

மாத ஊதியம் குறையாமல் நீடிப்பதற்கான பிரத்தியேக...

2026-08-31 17:31:58
news-image

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் -...

2026-08-31 14:40:21
news-image

கணவன் - மனைவி இடையே உள்ள...

2026-08-29 15:43:45
news-image

மனதிற்கினிய வாழ்க்கைத் துணை அமைவதற்கான எளிய...

2026-08-28 16:57:23
news-image

ராகு தோஷத்தை நீக்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-27 16:32:55
news-image

மகாலட்சுமி வழிபாடு : சில சூட்சமங்கள்

2026-08-26 16:50:28