(எம்.மனோசித்ரா)
சிறுவர்களுக்கு எதிரான உடல் ரீதியான தண்டனை தொடர்பான தண்டனைச் சட்டக்கோவையின் (பிரிவு 19) முன்மொழியப்பட்ட திருத்தம் சட்டமாக இயற்றப்படவில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 24ஆம் திகதி தண்டனைச் சட்டக்கோவை திருத்த மசோதா மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றாலும், அது ஒரு விவாதமே தவிர, சட்டமாக நிறைவேற்றப்படவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அத்தகைய ஒரு திருத்தம் நடைமுறைக்கு வர வேண்டுமானால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலும் அதற்குரிய மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த மாற்றம் இன்னும் செய்யப்படாததால், இந்த மசோதா நிலுவையில் உள்ளது.
மசோதாவில் திருத்தங்கள் கொண்டுவரக்கூடிய பாராளுமன்றத்தின் குழு நிலையின்போது குறித்த மாற்றங்கள் இன்னமும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
உடல் ரீதியான தண்டனை தொடர்பான திருத்தம் விவாத நிலையில் உள்ளது என்றும், அது சட்டமாக நிறைவேற்றப்படவில்லை என்றும் நீதி அமைச்சர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM