நடிகர் சசிகுமார் வெளியிட்ட 'அமரம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

03 Oct, 2025 | 04:07 PM
image

அறிமுக நடிகர் ராஜன் தேஜஸ்வர் கதையின் நாயகனாக நடிக்கும் 'அமரம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகர்- இயக்குநர் -தயாரிப்பாளர் -என தமிழ் திரையுலகில் பன்முக ஆளுமை மிக்க சசிகுமார் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் திருவருள் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அமரம் ' எனும் திரைப்படத்தில் ராஜன் தேஜஸ்வர், ஐரா அகர்வால், சாய் தீனா, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பரத்குமார் கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்திருக்கிறார்.

திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை திவ்ய ஷேத்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி. ஆர். ராஜன் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை நிர்மலா ராஜன் வழங்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து தற்போது  படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனோவிஷன் நிறுவனத் தயாரிப்பிலான 'வித் லவ்'...

2026-07-21 19:04:07
news-image

ராக்கிங் ஸ்டார்' யாஷ் நடிக்கும் 'டாக்சிக்'...

2026-07-21 17:15:28
news-image

'பட்ஜட்டை விட நான்கு மடங்கு கூடுதலாக...

2026-07-21 17:06:58
news-image

ஓக்டோபரில் வெளியாகும் நயன்தாராவின் 'ஹாய்'

2026-07-21 17:18:12
news-image

புதுமுக நடிகர் டி ஐ கபில்...

2026-07-21 16:56:30
news-image

நடிகர் ஜீவா நடிக்கும் 'தகப்பன்' படத்தின்...

2026-07-21 16:54:45
news-image

நடிகர் சூரி நடிக்கும் 'ஏழு கடல்...

2026-07-21 17:05:06
news-image

தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து...

2026-07-20 15:16:17
news-image

நமீத் மல்ஹோத்ராவின் தயாரிப்பில் உருவான 'ராமாயணம்...

2026-07-20 15:14:32
news-image

தொழில் முனைவோராக உயர்ந்திருக்கும் நடிகை சாக்ஷி...

2026-07-20 15:12:10
news-image

மூன்று இந்திய தேசிய விருதுகளை வென்ற...

2026-07-20 14:23:11
news-image

இணைய தொடர்களுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருதை...

2026-07-20 14:21:06